செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

சத்தான முளைக்கீரை கூட்டு செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:
 
முளைக்கீரை - 1 கட்டு
வெங்காயம்  - 1
தக்காளி  - 1
பச்சை மிளகாய் (கீறியது) - 2  
பாசிப்பருப்பு - அரை கப்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
 
அரைக்க தேவையான பொருட்கள்:
 
தேங்காய் துருவல் - 2  டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1 

செய்முறை:
 
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கீரையை நன்றாக மண் போக அலசி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாசிபருப்பை மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து குழைவாக வேகவைக்கவும். 
 
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
 
இத்துடன் நறுக்கிய கீரையை சேர்த்து நன்றாக வதக்கிய பின் வேக வைத்த பாசிபருப்பை சேர்க்கவும். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கீரையை வேகவைக்கவும். கீரை முக்கால்வாசி வெந்ததும், அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து சேர்க்கவும். இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து இறக்கவும். சுவை நிறைந்த முளைக்கீரை கூட்டு தயார்.