1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

தினை பாயசம் செய்வது எப்படி..?

தினை பாயசம் செய்வது எப்படி..?

சிறுதானியங்களை உண்ணும் பொழுது நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. சிறுதானியங்களில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, அத்தியாவசிய வைட்டமின்கள், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற மினரல்களும் அடங்கியுள்ளன. இதனால் சிறுதானிய உணவு வகைகள் உண்பதால் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.


 
 
தேவையானவை: 
 
தினை - 250 கிராம்
பனை வெல்லம் - 200 கிராம்
பால் - 250 மி.லி.
முந்திரிப் பருப்பு - 15
ஏலக்காய் - 5
உலர்ந்த திராட்சை - 15
நெய் - 2 தேக்கரண்டி
 
செய்முறை: 
 
ஒரு பாத்திரத்தில் 4 கோப்பை தண்ணீர்விட்டு, அதில் தினையைப் போட்டு நன்கு வெந்ததும், வெல்லத்தைத் தூளாக்கிப் போடவும். 10 நிமிடம் சிறு தனலில் வைத்து வேகவிட்டு, கடைசியாகப் பால் சேர்க்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து போடவும். கடைசியாக ஒரு கலக்குக் கலக்கி இறக்கும்போது, ஏலக்காயைப் பொடித்து சேர்க்கவும்.
 
குறிப்பு:

இனிப்பில் ஏலக்காயைக் கடைசியாகப் போடுவது வெறும் வாசத்துக்கு மட்டும் அல்ல. சளி பிடிக்கும் தன்மையையும்,  
செரிக்கத் தாமதிக்கும் மந்தத் தன்மையையும் ஏலக்காய் பொடி சரி செய்யும்.