புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

தீபாவளிக்கு வீட்டிலேயே காஜு கட்லி செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:
 
முந்திரி - 1 கப்
சர்க்கரை - 1 2 கப்
தண்ணீர் - 1/4 கப்

செய்முறை: 
 
முந்திரி பருப்பை வெறும் கடாயில் போட்டு மிதமான சூட்டில் சிறிது நேரம் வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.
 
சர்க்கரை பாகில் கொஞ்சம் கொஞ்சமாக முந்திரி பவுடர் போட்டு கிளறவும். நன்றாக கிளறி கொண்டே இருந்தால் சேர்ந்து வரும். ஒரு தட்டில் சிறிது நெய் தடவி, அதில் இந்த மாவு கலவையை கொட்டி நன்றாக பிசையணும். சப்பாத்தி மாவு மாதிரி வரும்.
 
நெய் தடவிய தடிமனான பிளாஸ்டிக் ஷீட்டின் மேல் மாவை வைத்து அதன் மேல் மற்றொரு நெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டை வைத்து சப்பாத்தி குழவியால் உருட்டி மெல்லிய சப்பாத்தியாக இட்டு துண்டுகள் போட வேண்டும். இப்போது இனிப்பான காஜு கட்லி தயார்.