1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala
Last Modified: புதன், 15 ஜூன் 2022 (17:45 IST)

சுவை மிகுந்த ரவா அப்பம் செய்வது எப்படி...?

Rava appam
தேவையான பொருட்கள்:

ரவை - 1/2 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
மைதா - 1/4 கப்
சர்க்கரை - 1/4 கப் + 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
சோடா உப்பு - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு



செய்முறை:

முதலில் ஒரு பௌலில் ரவையைப் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். ஒரு மணிநேரம் ஆன பின்னர் அதில் கோதுமை மாவு, மைதா மற்றும் சர்க்கரை சேர்த்து, தண்ணீர் சிறிது ஊற்றி ஓரளவு கெட்டியான மாவு போல், கட்டிகள் இல்லாதவாறு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதில் தேங்காய், ஏலக்காய் பொடி, பேக்கிங் சோடடா, உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

எண்ணெய் சூடானதும், ஒரு சிறிய குழிக் கரண்டியில் மாவை எடுத்து, எண்ணெயில் ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்படி அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், ரவா அப்பம் தயார்.