1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

சுவையான கடலை உருண்டை செய்வது எப்படி...?

சுவையான கடலை உருண்டை செய்வது எப்படி...?
தேவையான பொருட்கள்:
 
வேர்கடலை - 2 கப்
வெல்லம் - 1 கப்
தண்ணீர்- 1/2 கப்
நெய் - சிறிதளவு

செய்முறை:
 
ஒரு கடாயில் வேர்கடலையை போட்டு நன்றாக வறுக்க வேண்டும். பின் ஒரு கடாயில் வெல்லம் எடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து கரையும் வரை கலக்கவும். 
 
பிறகு அவற்றை வடிகட்டி மற்றொரு கடாயில் ஊற்றி கொதிக்க விடவும். பதம் வந்த பின் பாகில் வேர்கடலை சேர்த்து நன்கு கலக்கவும். அவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு கையில் சிறிது நெய் தடவி உருண்டைகளாக பிடிக்கவும். சுவையான கடலை உருண்டை தயார்.