1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஊறவைத்த உலர் திராட்சை தண்ணீரின் நன்மைகள் !!

உலர்பழங்களாக அதிகம் பயன்படுத்தப்படும் திராட்சைப்பழங்களில் ஒன்றான திராட்சை சுவையில் சிறந்து விளங்குவது மட்டுமின்றி, இதில் உள்ள சத்துக்கள் பல நோய்களைக் குணப்படுத்த பெரிதும் உதவுகின்றன.

இரத்த சோகை உள்ளவர்கள், இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில்  நீருடன் சேர்த்து உலர் திராட்சையை உட்கொண்டு வந்தாலோ, இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கலாம்.
 
மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், ஒரு கப் நீரில் சிறுது உலர் திராட்சையைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, மசித்து, அதில் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம். 
 
சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதை குணமாக்க இரவில் படுக்கும் போது ஒரு கப் நீரில் உலர் திராட்சையை ஊறவைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து அதனை உட்கொண்டு வந்தால் சிறுநீரக நோய்த்தொற்று குணமாகும். 
 
உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், ஒரு லிட்டர் தண்ணீரில் சில உலர் திராட்சையை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, நாள் முழுவதும் அந்த நீரைக் குடித்து, உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால், விரைவில் உடல் வெப்பம் தணியும்.