பிரட் அல்வா செய்வது எப்படி??
பிரட் அல்வா செய்வது எப்படி??
தேவையான பொருட்கள்:
பிரட் - 10 துண்டுகள
வற்றிய பால் - 3 கப்
கன்டன்ஸ்டு மில்க் - 4 மேசைக்கரண்டி
சீனி - 1 கப்
ஏலத்தூள் - சிறிது
முந்திரி - சிறிது
வெண்ணெய் - 1/2 கப் + 3 மேசைக்கரண்டி
செய்முறை:
பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு ஒரு பாத்திரத்தில் உதிர்த்து போடவும். ஒரு கடாயில் 3 மேசைக்கரண்டி வெண்ணெய் விட்டு முந்திரியை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே கடாயில் பிரட் துண்டங்களைப் போட்டு வறுக்கவும்.
அத்துடன் வற்றிய பால் ஊற்றி குழைய பிரட்டவும். அதன் பின்னர் கன்டன்ஸ்டு மில்க் சேர்க்கவும். பின்னர் சீனி சேர்த்து பிரட்டி விட்டு கொண்டே இருக்கவும்.
அதில் வெண்ணெய் சேர்த்து கட்டிவிழாதவாறு தொடர்ந்து கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் கெட்டியான பதம் வரும் போது முந்திரி, ஏலக்காய்த் தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான பிரட் அல்வா ரெடி.