வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

அரிசி பாயாசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்...!

தேவையான பொருட்கள்:
 
பாஸ்மதி அரிசி அல்லது பச்சரிசி  - 1  கப்
சர்க்கரை  - 1 கப்
பால்  -  3 கப்
பாதாம்பருப்பு  - 6
குங்குமப்பூ  - சிறிது
ஏலக்காய்தூள்  -  சிறிது
நெய் - 2  மேசைக்கரண்டி
கண்டென்ஸ்டு மில்க் - 3 மேசைக்கரண்டி

 
செய்முறை:
 
அரிசியை அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் பாலை காய்ச்சிக் கொள்ளவும். அரை வேக்காடாக வேக வைத்த அரிசியை கொதிக்கும் பாலில் கொட்டி நன்கு வேக விடவும்.
 
ஒரு மேசைக்கரண்டி பாலில் குங்குமப்பூவை சேர்த்து ஊற வைக்கவும். நன்கு கரைந்தவுடன் வெந்து கொண்டிருக்கும் சாதத்துடன் சேர்க்கவும். பாதாம்பருப்பை சிறிய துண்டுகளாக்கி நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
 
சாதம் நன்றாக வெந்தவுடன், பால் பாதியாக குறைந்தவுடன், சர்க்கரை, நெய், பாதாம்பருப்பு, ஏலக்காய்தூள், கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது கமகம நறுமணத்துடன், சுவையான அரிசி பாயசம் தயார்.