வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 நவம்பர் 2023 (13:07 IST)

தீபாவளி ஸ்பெஷல்: சுவையான நெய்யப்பம் செய்வது எப்படி?

Nei appam
தீபாவளி பலகாரங்களில் ஒன்றான சூடான, சுவையான நெய்யப்பம் முழுவதும் இயற்கையான பொருட்கள் மூலம் தயாரிக்கப்படுவது ஆகும். ஆரோக்கியமான சுவையான நெய்யப்பம் எப்படி செய்வது என பார்க்கலாம்.



தேவையான பொருட்கள்: அரிசி மாவு, கோதுமை மாவு, வெல்லம், பழுத்த வாழைப்பழம், நறுக்கிய தேங்காய் துண்டுகள், ஏலக்காய் பொடி, வறுத்த எள், நெய், எண்ணெய்

முதலில் தேங்காயை சில்லுகளாக வெட்டி அவற்றை குட்டிக்குட்டி துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் கடாயில் நெய் விட்டு தேங்காய் துண்டுகளை போட்டு நன்றாக பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கம்பி பதத்திற்கு இல்லாமல் கொஞ்சம் இலகுவாக பாகாக காய்ச்சிக் கொள்ள வேண்டும்.

அரிசி மாவையும், கோதுமை மாவையும் கலந்து ஒரு நிமிடத்திற்கு நிறம் மாறாமல் வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டி, அதனுடன் நன்கு பழுத்த வாழைப்பழம், நறுக்கி வறுத்த தேங்காய் துண்டுகள், வெல்லப்பாகு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

 இட்லி மாவு பதத்தில் மாவை தயார் செய்து அரை மணி நேரம் ஊறவைத்து பின்னர் அதில் ஏலக்காய் பொடி, ஒரு சிட்டிகை உப்பு, வறுத்த எள் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.

பின்னர் பனியார சட்டியை அடுப்பில் வைத்து நெய் விட்டு பனியாரக் குழியில், நாம் தயார் செய்து வைத்துள்ள மாவை இட்டு பொன்னிறமாக வரும்போது திருப்பிப் போட்டு எடுத்தால் சூடான சுவையான ஆரோக்கியம் நிறைந்த நெய்யப்பம் தயார்.

Edit by Prasanth.k