வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 19 அக்டோபர் 2021 (10:59 IST)

இவ அடுத்த ஜூலி... சர்வைவரில் தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பார்வதி பதிலடி!

பிரபல இணையதள சேனலான கலாட்டா தமிழ் யூடியூப்பில் தொகுப்பாளினியாக இருக்கும் VJ பார்வதி தனக்கென தனி ரசிகர்களை பெற்றுவிட்டார். எக்குத்தப்பாக நெட்டிசன்களிடம் கேள்வி கேட்டு விமர்சனத்திற்குள்ளாவது இவரது வழக்கமான ஒன்று.
 
ஆங்கராக அறிமுகமான கொஞ்சம் நாட்களில் பெரும் பேமஸ் ஆகினார். அதன் மூலம் கிடைத்தது தான் சர்வைவர் நிகழ்ச்சி ஜீ தமிழில் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற பார்வதி மக்களின் கிண்டல், கேலிக்கு உள்ளாகி வெளியேறினார். 
 
அவர் சர்வைவரில் நடந்துக்கொண்ட விதத்தை வைத்து அடுத்த ஜூலி என மோசமாக ட்ரோல் செய்தனர். இந்நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் தன்னை கிண்டல் அடுத்தவருக்கு பதிலளித்துள்ள பார்வதி, " ஜூலியை பற்றி பேசுவதற்கும் கேலி செய்வதற்கும் எனக்கு எந்த உரிமையும் இல்லை. 
 
என்னை கேலி செய்பவர்கள் செய்து கொண்டுதான் இருப்பார்கள். கேலி கேலி செய்ய வேண்டுமென்றால் செய்யுங்கள், திட்ட வேண்டுமென்றால் திட்டுங்கள். ஆனால், தயவுசெய்து என்னை அடுத்தவர்களோடு கம்பேர் செய்யதீர்கள் அது எனக்கு பிடிக்காது. எனக்கென்று ஒரு தனித்தன்மை இருக்கிறது. என கூலாக பதில் அளித்துள்ளார்.