சர்வைவர் புது அனுபவமாக இருக்கும்… அர்ஜுன் பகிர்வு!
நடிகர் அர்ஜுன் கலந்துகொள்ளும் சர்வைவர் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
ஜி தொலைக்காட்சியில் தனித்தீவில் போட்டியாளர்களுக்கு பலவித கடுமையாக போட்டிகள் வைக்கப்பட்டு அதில் இறுதிவரை சமாளித்துப் போராடும் விதமாக சர்வைவர் என்ற நிகழ்ச்சி உருவாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்க உள்ளார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஆக்ஷன் கிங் அர்ஜுன்தான் தொகுத்து வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான ப்ரோமோ நிகழ்ச்சி படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்ள பிரபலங்கள் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை, இந்நிலையில் இப்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை ஜி தமிழ் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் நிகழ்ச்சி பற்றி பேசியுள்ள அர்ஜுன் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ள இந்த நிகழ்ச்சியின் ஒரு பங்காற்றுவதில் எனக்கு புதிய அனுபவமாக இருக்கப் போகிறது. போட்டியாளர்களின் தைரியம், விடாமுயற்சி, நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை மற்றும் உற்சாகத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக இருக்கும். எனத் தெரிவித்துள்ளார்.