1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 2 ஜனவரி 2023 (15:45 IST)

அஜித் ஜென்டில்மேன், ஆர்யா டுபாக்கூர்... வைரலாகும் திரிஷா வீடியோ!

திரிஷா உடனான பேட்டியில் விஜே அஞ்சனா ஆர்யாவை டுபாக்கூர் என்று கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
 
தொகுப்பாளினி அஞ்சனா பல ஆண்டுகளாக ஆங்கராக இருந்து பிரபலமாகியுள்ளார். இவர்  'கயல்' படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.
 
தொடர்ந்து டிவி நிகழ்ச்சி , செலிபிரிட்டி நேர்காணல் என பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் த்ரிஷாவின் ராங்கி பட ப்ரோமோஷனுக்காக அவரை நேர்காணல் எடுத்திருந்தார். அதில் ஒவ்வொரு நடிகர்கள் பெயர்கள் உங்கள் போனில் என்னவென்று save செய்து வைத்துள்ளேன் என்று கேட்டார். 
 
அப்போது திரிஷா அஜித் ஒரு ஜென்டில்மேன் அவர் நம்பர் என்னிடம் இல்லை. தனுஷுக்கு D"என்று SAVE செய்துள்ளேன். என பேசிக்கொண்டிருக்கும்போதே அஞ்சனா அப்போ ஆர்யா என கேட்டு, அவர் ஒரு டுபாக்கூர் என அவரே பதிலும் சொல்லிவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.