வடிவேலு ரீஎண்ட்ரி ஆகும் முதல் படத்திற்கு இசையமைப்பவர் இவர்தான்!
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட வருடங்களுக்கு பின்னர் தற்போதுதான் மீண்டும் ரீ-என்ட்ரி ஆகிறார் என்பதும் அவர் லைக்காவின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடி இல்லை என்றாலும் முன்னணி நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாகவும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வந்துள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து வடிவேலு ரீஎன்ட்ரி ஆகும் படத்தில் சந்தோஷ் நாராயணன் அட்டகாசமான பாடல்களை கம்போஸ் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது