1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (17:14 IST)

நாய் சேகர் படக்குழுவினரோடு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வடிவேலு!

நடிகர் வடிவேலு இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வடிவேலுவின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி. இந்த படத்தில் நடிக்க வடிவேலு தயங்கிய போது அவருக்கு நம்பிக்கை அளித்து நடிக்க வைத்தவர் அந்த படத்தின் தயாரிப்பாளரான ஷங்கர். இந்நிலையில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் அந்தப்  படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிய போது மீண்டும் அதே கூட்டணி இணைந்தது.

ஆனால் பட உருவாக்கத்தின் போது ஷங்கருக்கும் வடிவேலுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இதையடுத்து அந்த படம் கைவிடப்பட்டது. இதனால் ஷங்கரைப் பற்றி வடிவேலு பல இடங்களில் விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில் இப்போது பிரச்சனை எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இன்று அவரின் 61 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினரோடு கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.