நாளை முதல் ரயில்களில் மக்களுக்கு அனுமதியில்லை - ரயில்வே துறை அறிவிப்பு
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அந்த வகையில் தேசியர் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005ன் கீழ் ஏற்கனவே ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நாளை முதல் தமிழக அரசு புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், இன்று புறநகர் ரயில்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதில்,மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மத்திய மற்றும் மாநில் அரசு ஊழியர்கள் மட்டுமே ரயில்களில் செல்ல அனுமதி உண்டு எனவும், காவல்துறை, மாநகராட்சி, ஊழியர்கள், சுகாதாரப்பணியார்கள் போன்ற கொரொனா முனகளப் பணியாளர்கள் ரயில்களில் செல்ல அனுமதியுண்டு எனவும் தெரிவிக்கப்படுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் வருவதால் 20 ஆம் தேதி வரை மக்களுக்கு அனுமதியில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், தனியர் மற்றும் அரசுப்பேருந்துகளில் செல்லும் பணிகள் எண்ணிக்கை 50% மட்டுமே இருக்கவேண்டும் . அதேபோல் பயணிகள் கட்டாயம முககவசம் அணிந்து வரவேண்டும் எனப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.