புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 6 மே 2021 (17:38 IST)

தமிழத்தில் 25 சிறப்பு ரயில்கள் ரத்து....ரயில்வே துறை

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அந்த வகையில் தேசியர் பேரிடர்  மேலாண்மைச் சட்டம் 2005ன் கீழ்  ஏற்கனவே ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்று( மே 06) முதல்  தமிழக  அரசு புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், இன்று புறநகர் ரயில்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதில்,மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மட்டுமே ரயில்களில் செல்ல அனுமதி உண்டு எனவும், காவல்துறை, மாநகராட்சி, ஊழியர்கள், சுகாதாரப்பணியார்கள் போன்ற கொரொனா முனகளப் பணியாளர்கள் ரயில்களில் செல்ல அனுமதியுண்டு எனவும் தெரிவிக்கப்படுள்ளது.  புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் வருவதால் 20 ஆம் தேதி வரை மக்களுக்கு அனுமதியில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

 மேலும், தனியர் மற்றும் அரசுப்பேருந்துகளில் செல்லும் பணிகள் எண்ணிக்கை 50% மட்டுமே இருக்கவேண்டும் . அதேபோல் பயணிகள் கட்டாயம முககவசம் அணிந்து வரவேண்டும் எனப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதில், 50% அரசு ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வரவேண்டும்.குரூப் ஏ பிரிவு  அரசு அதிகாரிகள் பணிக்கு வரவேண்டும். மற்ற அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வரவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எனவே இன்று தமிழகத்தில் கொரொனா தொற்று காரணமாக சுமார் 25 ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

 மேலும், மே மாதம் 8 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதிவரை 37 சிறப்பு ரயிகளை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இவற்றில் சுமார் 25 ரயிகள் தமிழகத்தில் வந்துசெல்லும் ரயில்கள் என்பது குறிப்பிடத்தக்கது.