இஞ்சி இடுப்பழகி பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் - அனுஷ்கா பேட்டி
அனுஷ்காவின் இஞ்சி இடுப்பழகி படத்துக்கு இரண்டு மாநிலங்கள் காத்திருக்கின்றன. அனுஷ்காவின் குண்டுத் தோற்றம், அப்படியென்ன படத்தில் சொல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் படம் குறித்த தனது கருத்துகளை அனுஷ்கா பகிர்ந்து கொண்டார்.
இந்த ஸ்கிரிப்டை ஒத்துக் கொள்ள பிரதான காரணம் என்ன?
இந்த தலைமுறையில் எல்லா இளம் பெண்களுக்கும் ஒரு இன்செக்யூரிட்டி இருக்கு. நான் அழகா இருக்கேனா இல்ல குண்டா இருக்கேனா இன்னும் பெட்டராகிறது எப்படின்னு ஒரு காம்ப்ளக்ஸ் இருந்துகிட்டேயிருக்கு. நாம எப்படியிருந்தாலும்... குண்டாயிருந்தாலும் நாம நல்லாயிருக்கோம் என்கிற கான்பிடென்ஸ் ஒரு பெண்ணுக்கு வேணும். அதுதான் இந்த ஸ்கிரிப்டை நான் செலக்ட் பண்ண முதல் காரணமாக இருந்தது.
ஸ்கிரிப்டுக்காகத்தான் இந்தப் படத்தை தேர்வு செய்தீர்களா?
இந்த மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் எழுதுவது அவ்வளவு எளிது கிடையாது. எல்லோரும் ரொம்ப பாதுகாப்பான சப்ஜெக்ட்லதான் படம் பண்ண நினைப்பாங்க. அப்படியில்லாம, ஒரு குண்டான பொண்ணை ஹீரோயினா வச்சு படம் எடுக்கிறது நிச்சயமா ஈஸி கிடையாது. பெண்களுக்கு ரொம்ப கான்பிடென்டான படமா இது இருக்கும்.
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்....
ஆர்யாவுடன் இது உங்களுக்கு இரண்டாவது படம். அவரைப் பற்றி...?
இரண்டாம் உலகத்திலிருந்து ஆர்யாவை நான் பார்த்துகிட்டு வர்றேன். தன்னுடைய ரோலை மட்டும் பார்க்காம, எந்த நிபந்தனையும் இல்லாம மத்தவங்களுக்காக நிற்கிறதுதான் ஆர்யாவோட குணம்.
இஞ்சி இடுப்பழகியில் நடித்தது எப்படியிருந்தது?
ரொம்ப சேலஞ்சிங்கா இருந்தது. உடன் நடிச்சவங்க எல்லாம் பெரிய லெஜன்ட்ஸ். ஊர்வசி மேடம்கூட பண்ணும்போது அவங்க காமெடி டைமிங், எமோஷன்ஸ்கூட மேட்ச் ஆகறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டேன்.
இசை...?
இந்த மாதிரி ஒரு படத்துக்கு மியூசிக் ரொம்ப முக்கியம். மரகதமணி சார் அளவுக்கு இந்த ஸ்கிரிப்டுக்கு உதவி செய்தவர்கள் வேறு யாரும் இல்லை. இந்த கதையை இவரைவிட வேறு யாரும் இவ்வளவு சிறப்பா சொல்லியிருக்க முடியாது.
உடல் எடையை அதிகரித்து குறைத்தது சிரமமாக இல்லையா?
நான் யோகா டீச்சரா இருக்கிறதால என்னால எடையை ஈஸியா ஏத்தி இறக்க முடிஞ்சது. எனக்கு அது பெரிய கஷ்டமாக தெரியலை.
படத்தைப் பற்றி உங்க பைனல் அபிப்ராயம்..?
படம் நல்லா வந்திருக்கு. எல்லோருக்கும் படம் பிடிக்கும். குறிப்பா பெண்களுக்கு கான்பிடென்ட் தர்றதா இந்தப் படம் இருக்கும்.

