வெள்ளி, 27 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Suresh
Last Updated : சனி, 12 டிசம்பர் 2015 (13:14 IST)

வெற்றி கிடைக்காவிட்டால் வேதனைப்படுவேன் - அனுஷ்கா பேட்டி

வெற்றி கிடைக்காவிட்டால் வேதனைப்படுவேன் - அனுஷ்கா பேட்டி
இஞ்சி இடுப்பழகி படத்துக்காக 20 கிலோ உடல் எடையை அதிகரித்தார் அனுஷ்கா.


 

 
அப்படி ஏற்றி எடை இறங்கவில்லை, அனுஷ்கா அவஸ்தைப்படுகிறார் என்றொரு செய்தி தமிழ், ஆந்திரா திரையுலகில் வதந்தியாக சுழன்று அடிக்கிறது. ஆனால், உண்மை நிலவரம் என்ன? அனுஷ்காவே பதிலளித்துள்ளார்.
 
இஞ்சி இடுப்பழகி போன்ற ஒரு படத்துக்கா இவ்வளவு எடை அதிகரிக்க வேண்டுமா?
 
இஞ்சி இடுப்பழகி படத்தின் கதை சாதாரணமானது தான். ஆனால் அதற்காக எனது உடல் எடையை அதிகரிக்க எடுத்த முயற்சிகள் மிகவும் அதிகம்.
 
இது தேவைதானா?
 
ஹீரோக்களை மையப்படுத்திய கதையில் நான் அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டேன். அதில் நடிப்பது எளிது. அது பற்றி நான் பெரிதாக கவலைப்படுவது இல்லை.
 
ஆனால் என்னை முன்னிலைப்படுத்தி எடுக்கும் படங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதில் மிகவும் அக்கறையுடன் இருப்பேன். இஞ்சி இடுப்பழகி என்னை மையப்படுத்திய படம் என்பதால் சிரமம் எடுத்துக் கொண்டேன்.
 
பழைய எடைக்கு வந்துவிட்டீர்களா?
 
கஷ்டப்பட்டு எடையை 20 கிலோ அதிகமாக்கினேன். இப்போது மீண்டும் உடல் எடையை குறைக்க என்னை வருத்திக்கொள்கிறேன்.
 
முன்பு தினமும் ஒருமுறை உடற்பயிற்சி, யோகா செய்து வந்தேன். இப்போது இரண்டு முறை உடற்பயிற்சி மற்றும் யோகா செய்து வருகிறேன். நான் படும் சிரமத்துக்கு நல்ல பலன் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. 
 
எவ்வளவு கிலோ குறைத்திருக்கிறீர்கள்?
 
இதுவரை 15 கிலோ எடையை குறைத்து விட்டேன். மீதம் உள்ள 5 கிலோவையும் இன்னும் ஒரு மாதத்திற்குள் குறைத்து விடுவேன். 
 
பாகுபலி 2 எப்போது தொடங்குகிறது? அதற்குள் எடையை குறைத்துவிடுவீர்களா?
 
இந்த மாத இறுதியில் பாகுபலி–2 படப்பிடிப்பு தொடங்குகிறது. அதற்குள் அதிகமான எடை முழுவதையும் குறைத்து விடமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
 
உங்களை மையப்படுத்திய படங்களுக்கு நிறைய மெனக்கெடுகிறீர்கள். அந்தப் படம் வெற்றி பெறாமல் போகும்போது உங்க மனநிலை எப்படி இருக்கும்?
 
என்னை முன்னிலைப்படுத்தி எடுக்கும் படங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதில் மிகவும் அக்கறையுடன் இருப்பேன்.
 
அந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வேன். எதிர்பார்த்தது நடக்காவிட்டால் வேதனைப்படுவேன்.