கர எனக்கு முக்கியமான படம்!.. இயக்குனர் விக்னேஷ் ராஜா பேட்டி!...
போர்த்தொழில் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் விக்னேஷ் ராஜா. அந்த படத்திற்கு பின் தனுஷை வைத்து கர என்கிற திரைப்படத்தை இயக்கத் தொடங்கினார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வீடியோ ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த படத்தில் மமிதா பைஜூ, கருணாஸ், வஞ்சரமுடு, ஜெயராம் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இப்போது அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நடப்பது போல 15 வருடங்களுக்கு முன்பும் போர் நடந்தது. அந்த காலகட்டத்தில் நடக்கும் கதை என இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா சொல்லியிருக்கிறார்..
மேலும் எனக்கு தனுஷ் சார் மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது.. அவரை எப்படி வேண்டுமானாலும் செதுக்கி பார்க்கலாம்.. எல்லோருக்கும் அவரை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.. நீங்கள் எந்த இயக்குனரிடம் கேட்டாலும் இதை சொல்வார்கள்.. கர படத்தை ஒரு வழக்கமான கதையாக எடுத்துக் கொள்ள முடியாது.. இப்போதுதான் துவங்கியிருக்கும் என் சினிமா கெரியரில் கர ஒரு முக்கியமான படமாக இருக்கும் என விக்னேஷ் ராஜா பேசியிருக்கிறார்..