1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Murugan
Last Modified: புதன், 9 ஆகஸ்ட் 2017 (19:19 IST)

சாம்பார் ராசன் என பெயரை மாற்றிக்கொண்டேன் - அனிமல் ஸ்டார் அதிரடி பேட்டி

சூப்பர்ஸ்டார், சுப்ரீம்ஸ்டார், பவர்ஸ்டார் எல்லாம் போய் அடுத்து தற்போது அனிமல் ஸ்டார் என ஒருவர் கோடம்பாக்கத்தில் களம் இறங்கியுள்ளார்.


 

 
சமீபத்தில் ‘மாட்டுக்கு நான் அடிமை’ என்கிற பெயரில்  உருவாகி வரும் படத்தின் போஸ்டர் வெளியானது.  அந்த போஸ்டரில் ‘மாடுகளின் தோழனாய் அனிமல் ஸ்டார் சாம்பார் ராசன் மற்றும் கோலிசோடா புகழ் ஏடிஎம் நாயகி சீதா இணைந்து கலக்கும் ‘மாட்டுக்கு நான் அடிமை’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கும் ஒரு படிமேலே போய் ‘ ரித்திக்ரோஷன் பிலிம் ஃபார்மர்ஸ்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இந்த படத்தின் ஹீரோவாக சாம்பார் ராசன் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாகவே கோலிசோடா நாயகி சீதா நடிக்கிறார் எனத் தெரிகிறது.  முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இப்படத்தை பி.கே. என்பவர் இயக்கியுள்ளார். மாடு நல்லா இருந்தா விவசாயம் நல்லா இருக்கும் என்கிற கருத்தை வலியுறுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாம்.


 

 
இந்த படத்தை பற்றிய பேசிய சாம்பார் ராசன், உலக நாயகன் கமல்ஹாசனுக்கு அடுத்து கோவணம் கட்டி நடித்திருப்பது நான் மட்டுமே. இதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. சிறியோர் முதல் பெரியவர் வரை எல்லோர் மனதிலும் இடம் பிடிக்க வேண்டும் என்பதால்தான் என் பெயரை ‘சாம்பார் ராசன்’ என மாற்றி விட்டேன். அதை கெஜட்டிலும் பதிவு செய்துவிட்டேன் என ஆச்சர்யப்படுத்துகிறார். 
 
நடிச்சா ஹீரோவாதான் நடிப்பேன். யார் கூடவும் நடிக்கனும்னு எனக்கு ஆசை இல்லை. ஆனா, வருங்காலத்துல என்னோடு நடிக்க வேண்டும் என பல கதாநாயகிகள் ஆசைப்படுவாங்க என்று அதிரடியாக பேசுகிறார் சாம்பா ராசன்.