1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Murugan
Last Modified: திங்கள், 24 ஜூலை 2017 (18:27 IST)

நான் கருப்பு கமல்ஹாசனா?- விளக்குகிறார் விஜய்சேதுபதி

விஜய் சேதுபதி மற்றும் மாதவன் ஆகியோர் இணைந்து நடித்து, சமீபத்தில் வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


 

 
இந்நிலையில் அவர் அளித்த பேட்டி இதோ:
 
விஜய் சேதுபதி இயக்குனர்களை தேர்ந்தெடுக்கிறாரா அல்லது இயக்குனர்கள் விஜய் சேதுபதியை தேர்ந்தெடுக்கிறார்களா?
 
'இரண்டும்தான். கண்ணதாசனின் பாடலான கொடியசைந்ததும் காற்றசைந்ததா அல்லது காற்றசைந்தவுடன் கொடி அசைந்ததா என்பது போல் இரண்டும்தான் இயல்பாக அமைகிறது.
 
நடிகர் மாதவனோடு பணியாற்றிய அனுபவம் பற்றி...?
 
மாதவன் என்னை விட மிகவும் சீனியர் நடிகர். பல பெரிய நடிகர்கள், இயக்குநர்களோடு பணியாற்றிய அவரோடு நடிப்பது எனக்கு வசதியாக இருந்தது. இயக்குனர் மற்றும் சக நடிகர்களோடு நல்ல புரிதல் இருந்தது'.
 
பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் விஜய்சேதுபதி அடுத்த கமல்ஹாசனாக உருவெடுக்க முடியும் என்று மாதவன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

விஜய்சேதுபதியை கருப்பு கமல்ஹாசன் என்று கூறலாமா?
 
ஒரு கமல்ஹாசன்தான் உள்ளார். அவர் ஒரு மிகப்பெரிய சாதனையாளர். அவரோடு என்னை ஒப்பிடக்கூடாது. நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்.


 

 
அண்மைக்காலமாக அரசியல் ரீதியான கருத்துக்களை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டு வருவது குறித்து?
 
இந்த நாட்டில் உள்ள மற்ற குடிமக்களை போல கமல்ஹாசனுக்கும் கருத்து சொல்ல உரிமை உள்ளது. அது அவரது உரிமை. அதில் தவறு எதுவும் இல்லை.
 
இயக்குநராகும் விருப்பம் உள்ளதா?
 
இயக்குனராகும் ஆசை நிச்சயமாக உள்ளது. ஆனால், நேரம் இல்லை. இன்னமும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளது. அப்படி கற்றுக் கொண்டு அதற்கான நேரம் வரும் போது நான் திரைப்படங்கள் இயக்க முடியும்.
 
விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி பற்றி?
 
புஷ்கர்-காயத்ரியின் முந்தைய திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் அவர்களின் சிந்தனை ஓட்டம் எனக்கு பிடித்திருந்தது.