வெள்ளி, 27 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Suresh
Last Updated : செவ்வாய், 29 டிசம்பர் 2015 (09:28 IST)

தைரியமுள்ள பெண்ணை சினிமா உலகில் யாருக்கும் பிடிப்பதில்லை - அனுஷ்கா சர்மா விளாசல் பேட்டி

தைரியமுள்ள பெண்ணை சினிமா உலகில் யாருக்கும் பிடிப்பதில்லை - அனுஷ்கா சர்மா விளாசல் பேட்டி
இந்தி சினிமா வியத்தகு மாற்றங்களுடன் முன்னேறுகிறது. அனுஷ்கா சர்மா, கங்கனா ரனவத், தீபிகா படுகோன், சோனம் கபூர் போன்ற நடிகைகள் தங்களுக்கென்று ஒரு மார்க்கெட்டை இந்தி சினிமாவில் உருவாக்கியிருக்கிறார்கள்.


 

 
மோடியைக்கூட அவரது செல்பி மோகத்துக்காக விளாச இந்தியின் இளம் நடிகைகள் தயங்குவதில்லை. அனுஷ்கா சர்மா வயதான நடிகர்கள் குறித்து அளித்த பேட்டி இன்னும் பாலிவுட்டில் சூடு குறையாமல் உள்ளது.
 
வயதான நடிகர்கள் மீது உங்களுக்கு அப்படி என்ன கோபம்?
 
சினிமாவில் பெண்கள் மிகவும் அழகாக இருக்க வேண்டும். நாயகனை ஈர்க்கக்கூடிய அளவுக்கு அவர்கள் தேவதை போன்று தோன்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
நடிகர்கள் மட்டும் தங்கள் வயது தாண்டியும் ஹீரோவாகவே நடித்துக்கொண்டிருக்க, ஹீரோயின் மட்டும் இளம்பெண்ணாகவே இருக்க வேண்டும் என்பது என்ன நியாயம்? இதில் ஒரு பாலியல் சார்ந்த பார்வை இருக்கிறது.
 
நடிகைகள் தங்களின் சில அங்கங்களைக் காட்டுவது, அழகாக நடனமாடுவது தவிர நமது சினிமாக்களில் அவர்களுக்கு என்ன இடம் இருக்கிறதுட. இதுபோன்ற படங்களை பெரிய நடிகர்கள் ஆதரிப்பதுதான் இம்மாதிரியான படங்கள் வெளியாகக் காரணம்.
 
இப்படி துணிச்சலாக பேசுவதை சினிமா உலகம் விரும்பாதே?
 
ஆமாம், தைரியமுள்ள பெண்ணை சினிமா உலகில் யாருக்கும் பிடிப்பதில்லை. இந்தியாவில் எல்லோரது ரசனையும் சாதாரணமாக உள்ளதால்தான் இங்கே பலரால் நட்சத்திரங்களாக இருக்க முடிகிறது.
 
அந்தவகையில் அவர்களெல்லாம்  அதிர்ஷ்டசாலிகள் என்று என் சக திரை நண்பர் ஒருவரிடம் ஒருமுறை கூறினேன். அது உண்மை.
 
உங்களின் பிரதான கோரிக்கை என்ன?
 
நடிகைகளான நாங்கள் ஒன்றும் முட்டாள்களோ, ஒன்றும் தெரியாதவர்களோ அல்ல. எங்களுக்கும் மனம் இருக்கிறது, அறிவு இருக்கிறது. நாங்கள் கூறும் ஆலோசனைக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
 
அதனை ஹீரோக்கள் ஏற்றுக் கொள்வார்களா?
 
மாட்டார்கள். ஒரு படத்தில் ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது என்றாலே அதை ஹீரோக்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
 
சம்பள விஷயம் குறித்து உங்கள் கருத்து என்ன?
 
அதென்னவோ ஆண்களுக்குத்தான் அதிக செலவு இருக்கிறது, அவர்கள்தான் ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது போல, பெண்கள் எல்லாம் மற்றவர்கள் சம்பாத்தியத்தில்தான் வாழ்கிறார்கள் என்பதைப் போல சம்பள விஷயமும் இருக்கிறது. நடிகர்களுக்கு அதிக சம்பளம், எங்களுக்கு குறைவான சம்பளம்.
 
100 கோடி கிளப் குறித்து உங்கள் அபிப்ராயம் என்ன?
 
இப்போதெல்லாம் படங்கள் 100 கோடி வசூலைக் குவிக்க வேண்டும் என்று நிறைய நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அது இந்தி திரைப்பட உலகையே கெடுத்து வைத்திருக்கிறது.
 
நடிகர்களும் புதிதாக ‘ரிஸ்க்’ எடுக்கத் தயங்குகிறார்கள். நடிகைகளிடம் பெரிதாக எதுவும் எதிர்பார்க்கப்படுவதில்லை என்பதால் அவர்கள் ‘ரிஸ்க்’ எடுப்பது எளிது.
 
உங்களால்தான் வீராட் ஹேnலி சரியாக விளையாடவில்லை என்று ஒரு விமர்சனம் உள்ளதே?
 
வீராட் கிரிக்கெட் ஆடுவதை நான் பார்க்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவர் ஆடுவதை நானும் பார்க்க விரும்புகிறேன். அவ்வளவுதான்.
 
இதில் மற்றவர்கள் சொல்வதைப் பற்றியெல்லாம் நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? அவர் சரியாக ஆடவில்லை என்றால், அதற்குக் காரணம் நான்தான் என்று கூறுவதெல்லாம் எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.