வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Siva
Last Modified: புதன், 7 டிசம்பர் 2022 (14:33 IST)

2வது முறியாக பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு! மன்னர் குடும்பத்தினர் அதிர்ச்சி

charles
பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் மீது ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் முட்டை வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இரண்டாவது முறையாக மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசப்பட்டது சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
 லண்டன் அருகில் உள்ள ஒரு நகரத்திற்கு சார்லஸ் மன்னர் சமீபத்தில் சென்றபோது அவர் மீது மர்ம நபர் ஒருவரால் முட்டை வீசப்பட்டது. முட்டை வீசிய நபர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்
 
முட்டை வீசிய நபர் 20 வயதுடைய இளைஞர் என்றும் முட்டை வீசியது எதனால் என்பது குறித்து அவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது 
 
அடுத்தடுத்து பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசப்பட்டது மன்னர் குடும்பத்தின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva