வைரலாகும் சாக்ஷியின் குறும்படம் - தரமான சம்பவம் இருக்கு!

Last Updated: வியாழன், 4 ஜூலை 2019 (18:55 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் சூடு பிடித்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாக வனிதா, சாக்ஷி, அபிராமி , ஷெரின் உள்ளிட்டோர் பிரச்சனைக்கு மேல் பிரச்னையை உண்டாக்கி வீட்டில் இருக்கும் மற்றவர்களை வெறுப்பேற்றி வருகின்றனர். 
 
நேற்றைய நாளில் பிரச்சனை வெடித்து கலவர பூமியாக பிக் பாஸ் வீடு மாறியது. இவர்களின் சண்டையில் லொஸ்லியாவும் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது ரசிகர்கள் வனிதா மற்றும் சாக்ஷி மீது கடும்  கோபத்தில் இருந்தனர். 
 
இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமே சாக்ஷி தான்.  அதாவது மீரா மற்றும் முகனின்  கான்வெர்சேஷன். ஆனால் அவர்கள் பேசியதை சாக்ஷி தவறாக மற்ற போட்டியாளர்களின் கூற இதனால் எல்லோரும் கடுப்பாகி விட்டனர்.  
 
இதனால் மக்களும் சாக்ஷி மீது கடுப்பில் இருக்கின்றனர். எனவே வருகிற வராம் சாக்க்ஷிக்கு கண்டிப்பாக ஒரு குறும்படம் போட வேண்டும் என்று ரசிகர்கள் கூறிவந்த நிலையில் தற்போது சாக்க்ஷியின் குறும்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவியது.
 
இந்த குறும்படத்தை முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் காஜல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :