திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 4 ஜூலை 2019 (17:38 IST)

பிக்பாஸ் லொஸ்லியா திருமணம் ஆனவரா? - திடுக்கிடும் தகவல்!

பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியா ஒட்டுமொத்த மக்களையும் வெகுவாக கவர்ந்துவிட்டார். ஆனால் இரண்டாவது சீசனில் அவர் இடத்தை யாராலும் எட்டி கூட பிடிக்கமுடியவில்லை. இந்நிலையில் தற்போது  மூன்றாவது சீசனில் லொஸ்லியா நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வார காலத்திலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் ஈர்த்துவிட்டார்.  


 
பிக்பாஸில் அவர் செய்யும் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதனை வீடியோவாக எடுத்து ரசிகர்கள் ஷேர் செய்து  ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதனால் தற்போது லொஸ்லியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகிவிட்டனர். ரசிகர்கள் அவரை விரும்புவதற்கு காரணமே அவரது கேரக்டர் தான். 
 
ஆனால் தற்போது லொஸ்லியா ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது லொஸ்லியாவுடன் படித்த ஸ்கூல்மேட் ஒருவர் அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும் விவாகரத்து கூட ஆனது என்றும் டுவிட் போட்டு ஒட்டுமொத்த மக்கள் மனதிலும் குண்டு தூக்கி போட்டுள்ளார். அவர் சொன்னதை நீங்களே பாருங்கள்... 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட படுகவர்ச்சியாக உடையில் லொஸ்லியாவின் புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகி மெகா வைரலானது. இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்ஸ் பிக்பாஸ் வீட்டில் கும்பகுத்துவிளக்கு போன்று உடையணித்துக்கொண்டு  வெளியில் எப்படி இருந்திருக்கிறார். அவர் தனது உண்மை முகத்தை மூடி மறைத்து பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார் என்று கூறினர். ஆனால் இதனை கண்ட அவரது ரசிகர்கள் இது லொஸ்லியா இல்லை வேறு யாரோ என்று கூறி மனதை தேற்றிக்கொண்டனர். 
 
இந்நிலையில் தற்போது லொஸ்லியா திருமணமாகி விவாகரத்தானவர் என்பது இன்னும் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியயை கொடுத்துள்ளது. இருந்தும் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.