கவினை கழட்டிவிட்டு முகினுடன் அபிராமி காதலா? - கொளுத்திப்போட்ட ஷாக்ஷி!

Last Modified வியாழன், 4 ஜூலை 2019 (13:15 IST)
பிக்பாஸ் வீட்டில் சமீபநாட்களாக எப்போதும் சண்டை சர்ச்சரவுமாக இருக்கிறது. குறிப்பாக அபிராமி ,சாக்ஷி , ஷெரின் ,வனிதா உள்ளிட்டோர் மக்களின் மோசமான விமர்சனங்களை பெற்று வெறுப்புக்குள்ளாகி வருகின்றனர். 
 

 
அந்தவகையில் சற்றுமுன் வெளிவந்துள்ள ப்ரோமோ வீடியோவில்  சாக்ஷி மற்றும் ஷெரின் முகின்-அபிராமியின் நட்பு பற்றி பேசுகின்றனர். அபிராமிக்கு முகின் மீது ஒரு விதமான ஈர்ப்பு இருக்கிறதாக ஷெரின் கொளுத்தி போடுகிறார். இதனால் கவின் கடுப்பானது போல் இந்த ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.
 
தேவையெல்லாமல் நடக்காத ஒரு விஷயத்தை பேசி பேசி பெரிதாக்கி பூகம்பமாக பிரச்னை வெடிக்கிறது. இதனால் மதுமிதா மற்றும் மீரா மீதுன் பலி கடா ஆகிவிடுகின்றனர். எனவே இன்றும் பிக்பாஸ் வீட்டில் சண்டை வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 


இதில் மேலும் படிக்கவும் :