இரட்டைக் குதிரை சவாரியில் விருப்பமில்லை - சமந்தா பேட்டி

Mahalakshmi| Last Updated: புதன், 15 ஏப்ரல் 2015 (12:35 IST)
சர்ச்சையின் நாயகியாகியிருக்கிறார் சமந்தா. ட்விட்டரில் பிரபலங்களை சீண்டி சிக்கலுக்குள்ளாவது இவரது பொழுதுப்போக்கு. சித்தார்த், ராணாவுடன் கிசுகிசுக்கப்பட்டவர் தற்போது தொழிலதிபரை காதலிப்பதாக செய்தி. ஹைதராபாத்தில் இதுபற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பட்படார் என்று வந்தது பதில்.
தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகிறீர்களே?
 
என் மனதில் இருப்பதை சோஷியல் மீடியாவில் பதிவு செய்கிறேன். மற்றபடி சினிமாதுறையில் எனக்கு யாருடனும் சண்டை கிடையாது. எல்லோருடனும் நட்புடனே பழகுகிறேன்.
 
இந்திப் படங்களை தவிர்ப்பது ஏன்?
 
இந்திப் படங்களில் நடிக்க எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை. இரட்டை குதிரை சவாரி செய்ய விருப்பமில்லை.
 
தொழிலபதிபர் ஒருவரை நீங்கள் காதலிப்பதாக செய்தி உள்ளதே?
 
அந்த தொழில் அதிபர் யார் என்று சொல்லுங்கள். என்ன தொழில் செய்கிறார் என்று கூறுங்கள். போன் நம்பரையும் தெரியப்படுத்துங்கள். நடிகருடன் இணைத்து பேசாமல் தொழில் அதிபரை மணக்க போகிறேன் என்று சொன்னதில் சந்தோஷம்தான். காரணம் நான் சினிமா நடிகரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன். சினிமா தொழிலில் சம்பந்தப்பட்ட யாரையும் மணக்கமாட்டேன். 
 
அப்படியானால் தொழிலதிபரை நீங்கள் காதலிப்பது உண்மைதானா?
 
தொழில் அதிபரை திருமணம் செய்துகொள்ள விருப்பம் உண்டு. ஆனாலும் காதல் கீதல் எதுவும் இப்போது இல்லை. திருமணமும் இப்போதைக்கு இல்லை. 


இதில் மேலும் படிக்கவும் :