1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 11 ஏப்ரல் 2026 (16:20 IST)

சந்தானத்துக்கு இவ்ளோ பெரிய மகன் இருக்காரா?!. போட்டோ பார்த்து ஷாக்கான ஃபேன்ஸ்!..

santhanam
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சுபா நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சந்தானம். நடிகர் சிம்பு இவரை மன்மதன் படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக மாறினார் சந்தானம். ஆர்யா, சூர்யா, விஷால், ஜீவா, சிம்பு உள்ளிட்ட பல இளம் நடிகர்கள் நடிக்கும் படங்களில் காமெடி நடிகராக நடித்தார் சந்தானம்..

சந்தானம் நடித்து வெளியான சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. முன்னணி காமெடி நடிகனாக இருந்து சந்தானம் திடீரென இனிமே ஹீரோவாகதான் நடிப்பேன் என அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அதேநேரம், அவர் ஹீரோவாக நடித்து வெளியான பெரும்பாலான படங்கள் வெற்றியை பெறவில்லை. ஒருபக்கம், சந்தானத்தின் குடும்ப புகைப்படம் இதுவரை வெளியானது இல்லை. இந்நிலையில்தான், சந்தானம் தனது மகன் நிபுன் அருகில் நிற்கும் புகைப்படம் தற்போது வெளியாகியிருக்கிறது.

santhanam

சந்தனத்தின் மகன் நிபுன் சந்தனத்தை விட உயரமாக வளர்ந்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த பலரும் ‘சந்தானத்துக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா?’ என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். சந்தானத்துக்கு ஒரு மகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.