1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : சனி, 11 ஏப்ரல் 2026 (12:43 IST)

இணையத்தில் கசிந்த ஜனநாயகன்’ படத்துக்கு விமர்சனமா? ஒரு நியாயம் வேண்டாமா?

jananayagan
இணையத்தில் கசிந்த நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் மற்றும் அது தொடர்பாக இயக்குனர் அமீர் தெரிவித்துள்ள கருத்துக்கள் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 
 
நடிகர் விஜய் அரசியலில் நுழைவதற்கு முன்னதாக நடித்த கடைசி திரைப்படம் 'ஜனநாயகன்'. தணிக்கைக் குழுவின் சான்றிதழ் சிக்கலால் இப்படம் திரையரங்குகளில் வெளியாகத் தாமதமாகி வந்த நிலையில், நேற்று  சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியானது.
 
இப்படத்தைப் பார்த்த இயக்குனர் அமீர், தனது வாட்ஸ்ஆப் தளத்தில் ஒரு கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதில், "ஜனநாயகன் படத்தில் வரும் காட்சிகளில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது ஏன்? இதுதான் உங்கள் அரசியலா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே விஜய்யின் அரசியல் வருகை குறித்து விமர்சித்து வந்த அமீர், தற்போது இப்படத்தின் கதைக்கரு குறித்தும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
 
இணையத்தில் படம் கசிந்தது தொடர்பாக தயாரிப்பு தரப்பு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், அமீரின் இந்த விமர்சனம் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
 
Edited by Siva