திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 17 மார்ச் 2023 (19:25 IST)

துபாயில் பிரம்மாண்டமாக வெளியாகும் ஷாந்தனுவின் 'இராவண கோட்டம்' ஆடியோ லான்ச்!

நட்சத்திர வாரிசு நடிகரான ஷாந்தனு பாக்யராஜ் 'இராவண கோட்டம்'  என்ற படத்தில் நடித்துள்ளார். இதில்  ஆனந்தி ஹீரோயினாக நடித்திருக்கிறார். இப்படத்தை ‘மதயானைக்கூட்டம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி நல்ல பெயரை பெற்றவர்  விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார். 
 
இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா துபாயில் பிரமண்டமாக நடைபெற்றது. இது குறித்து தயாரிப்பாளர் திரு.கண்ணன் ரவி கூறும்போது, ​​துபாயில் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் பெரிய ஸ்டார்களின், பெரிய படங்களின் இசை வெளியீட்டு விழாவை தமிழ் சினிமா பார்த்திருக்கிறது. இப்போது,  ​​எனது முதல் தயாரிப்பான 'இராவண கோட்டம்' படத்தின் இசை வெளியீட்டு விழா தி இந்தியன் ஹை ஸ்கூல், ஓத் மேத்தா, ஷேக் ரஷித் ஆடிட்டோரியத்தில் மார்ச் 18 மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
 
வெற்றிகரமான KRG குரூப் ஆஃப் கம்பெனிஸ் (துபாய்) இந்த நிகழ்வு ஒரு பிரமாண்டமான நிகழ்வாக நடைபெறுவதை உறுதிசெய்ய எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்துள்ளது.
திறமை மிகுந்த இளம் நடிகரான ஷாந்தனு பாக்யராஜ் நடிப்புத் திறமையை நிரூபிக்கும் தனது சரியான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார். சவால் மிகுந்த வாய்ப்புகளை விரும்பக்கூடிய அவருக்கு 'இராவண கோட்டம்' திரைப்படம் நிச்சயம் நல்ல வாய்ப்பாக அமையும்.
 
கார்த்திக் நேதா எழுதிய யாசின் நிசார் மற்றும் வந்தனா சீனிவாசன் பாடியுள்ள படத்தின் முதல் சிங்கிளான 'அத்தன பேர் மத்தியில' அதன் மெல்லிசை ட்யூன் மற்றும் அழகான வரிகளுக்காக இசை ஆர்வலர்களிடமிருந்து மகத்தான வரவேற்பைப் பெற்றது. பாடல் வெளியாகி 48 மணி நேரத்திற்குள் ஒரு மில்லியன் ‘ஆர்கானிக்’ பார்வைகளைக் கடந்துள்ளது.