திங்கள், 13 ஏப்ரல் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 11 மார்ச் 2026 (12:43 IST)

உன் பொண்டாட்டி சீதாவை வச்சி நீ ஒழுங்கா குடும்பம் நடத்துனியா? பார்த்திபனை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

parthiban
விஜய் மற்றும் த்ரிஷா குறித்து சமூக வலைதளங்களில் நடிகர் பார்த்திபன் தெரிவித்து வரும் சில கருத்துக்கள் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளன. திரைத்துறையில் தனது வித்தியாசமான சிந்தனைகளால் 'புதிய பாதை' வகுத்தவர் என்று பெயரெடுத்தாலும், சமீபகாலமாக அவர் பதிவிடும் கருத்துக்கள் பலரது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக, விஜய், த்ரிஷா குறித்து அவர் மறைமுகமாக தாக்கி பேசுவது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பார்த்திபனின் இந்த செயலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, நெட்டிசன்கள் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் கடுமையாக சாடி வருகின்றனர். 
 
"மற்றவர்களை விமர்சிப்பதற்கு முன்னால், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் எப்படி நடந்துகொண்டீர்கள் என்று பாருங்கள்" என்றும், அவரது முன்னாள் மனைவி சீதாவுடனான கசப்பான பிரிவை நினைவுபடுத்தியும் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 
 
ஒரு படைப்பாளியாக பார்த்திபனை ரசித்தாலும், சக கலைஞர்களை குறித்து அவர் நாகரீகமற்ற முறையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
 
திரையுலகில் மூத்த கலைஞராக இருப்பவர் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.
 
Edited by Siva