திங்கள், 13 ஏப்ரல் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 11 மார்ச் 2026 (18:31 IST)

சமந்தாவுக்கு அப்புறம் ஹன்சிகா மட்டும்தான்!.. விவாகரத்தில் சம்பவம் பண்ணிட்டாரே!...

samantha
தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் ஹன்சிகா மோத்வானி. தனுஷ், சிம்பு, விஷால், சிவகார்த்திகேயன், ஆர்யா உள்ளிட்ட பல இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். சிம்புவுடன் இவருக்கு காதல் ஏற்பட்டு அதன்பின் பிரேக்கப் ஆனது. ஒருகட்டத்தில் பல படங்களிலும் நடித்து கோலிவுட்டில் முன்னணி நடிகையாக மாறினார்.

மும்பையை சேர்ந்த ஹன்சிகா சோஹோல் கதுரியா என்பவரை 2022ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். சோஹோல் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தானவர். ஆனாலும் இருவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

அதோடு, இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். இது தொடர்பான வழக்கு மும்பை குடும்ப நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இன்று ஹன்சிகாவுக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதில் ஆச்சர்யமான விஷயத்தில் ஹன்சிகா கணவரிடம் எந்த ஜீவனாம்சமும் கேட்கவில்லை. ஏற்கனவே நாக சைதான்யாவிடமிருந்து விவகாரத்து பெற்ற நடிகை சமந்தாவும் எந்த ஜீவனாம்சமும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.