1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 27 ஏப்ரல் 2023 (23:18 IST)

ராஜஸ்தான் அணிக்கு எதிராக 2வது தோல்வி: பேட்டிங்கில் சொதப்பிய சிஎஸ்கே

இன்று நடைபெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 203 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
சென்னை அணி பேட்ஸ்மேன்கள் முதல் ஆறு ஓவர்களில் மிகவும் மெதுவாக விளையாடினர் என்பதும் 42 ரன்கள் மட்டுமே அடித்தனர் என்பதால் அதுவே தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதன் பின்பும் இலக்கை நோக்கி விரட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முயன்றாலும் அடுத்தடுத்து விக்கெட் விழுந்ததால் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே முதல் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் தோல்வி அடைந்த சென்னை அணி இரண்டாவது முறையாக தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
Edited by Siva