1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: வியாழன், 27 ஏப்ரல் 2023 (22:32 IST)

திருவேட்டீஸ்வரர் கோயிலில் வரும் 5 ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம்

chennai
சென்னை திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் கோயிலில் வரும் 5  ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறவுள்ளது.
 

சென்னை திருவல்லிக்கேணியில் திருவேட்டீஸ்வரன் பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயம் சண்பகாம்பிகை உடனுறை திருவேட்டீஸ்வரர் கோவில் ஆகும்.

இக்கோவிலில் தேவார திருப்பதிகங்களில் திரு நாவுக்கரசரின் காப்பு திருத்தாண்டகத்தில் இக்கோவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இக்கோவிலில் வரும் 24 ஆம்தேதி சித்திரை பெருவிழா நடைபெறவுள்ளது. 24 ஆம் தேதி தொடங்கி மே 6-ல் என மொத்தம் 13 நாட்கள் இத்திருவிழா நடைபெறவுள்ளது.

அதன்படி, 28 ஆம் தேதி அதிகாலை 8 மணிக்கு நந்தி சேவையும், 30 ஆம் தேதி இரவு 10 மணிக்கு ரிஷப வாகன சேவையும், 2 ஆம் தேதி காலை :30 மணிக்கு திருத்தேர் விதி உலாவும், 3 ஆம் தேதி மாலை 4 மணிக்கு 3  நாயன்மார் உற்சவம் , 4 ஆம் தேதி இரவு 9 மணிக்கு பிஷாடனார் உற்சவம்,  5ஆம் தேதி இரவு 9 மணிக்கு திருக்கல்யாண உற்சவம்  நடைபெறும் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.