1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 24 அக்டோபர் 2022 (16:23 IST)

மழையால் தாமதம்: 9 போட்டியாக மாறிய தென்னாப்பிரிக்கா-ஜிம்பாவே போட்டி!

SA vs Zim
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுவதாக இருந்தது
 
ஆனால் டாஸ் போட்டவுடன் மழை பெய்ய ஆரம்பித்ததால் போட்டி தொடங்க தாமதமானது. இந்த நிலையில் சற்றுமுன் போட்டி தொடங்கிய இந்த போட்டி 9 ஓவர் போட்டியாக மாற்றப் பட்டது
 
இதனையடுத்து ஜிம்பாப்வே அணி களம் இறங்கிய நிலையில் அந்த அணி 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 15 ரன்கள் என்ற நிலையில் தத்தளித்து வருகிறது
 
தென்னாப்பிரிக்கா அணி மிக அபாரமாக பந்துவீசி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் எந்த அணி வெல்லும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran