செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (14:09 IST)

உலகக்கோப்பையை வென்று 10 ஆண்டுகள்… நினைவுகளைப் பகிர்ந்த யுவ்ராஜ் சிங்!

இந்திய அணி 2011 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்று இன்று 10 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன.

2007 ஆம் ஆண்டு டி 20 உலகக்கோப்பை  வெற்றி மற்றும் 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை வெற்றி ஆகிய இரண்டு தொடர்களிலும் இந்திய அணியின் வெற்றிக்காக சிறப்பாக செயல்ப்பட்டவர் யுவ்ராஜ். டி 20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள், ஆஸிக்கு எதிராக 30 பந்துகளில் 70 ரன்கள் அடித்து வெற்றியைத் தன் வசம் ஆக்கியவர்.

அதேபோல 2011 உலகக்கோப்பையில் 15 விக்கெட்கள் மற்றும் 5 அரைசதங்களோடு 362 ரன்கள் என தொடர்நாயகன் விருது பெற்றவர். தொடர்நாயகன் விருது பெற்றபோது சச்சினுக்காக இந்த கோப்பை என அறிவித்த யுவ்ராஜ் இப்போது தனது மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் ‘தொடரின் போது நாங்கள் கபில்தேவிடம் உரையாடினோம். அது எங்களுக்கு உத்வேகமாக இருந்தது. சச்சினுக்காகதான் அந்த கோப்பையை வெல்லவேண்டும் என தீவிரமாக செயல்பட்டோம். தோனி வெற்றிக்கான கடைசி சிக்ஸரை அடிக்கும் போது எதிர்முனையில் இருந்தது உணர்ச்சிப் பூர்வமானது’ எனக் கூறியுள்ளார்.