ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (10:39 IST)

தோனியை விட சிறந்த வீரர் ரிஷப் பண்ட்… பர்த்தீவ் படேல் கருத்து!

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பர்த்தீவ் படேல் தோனியை விட ரிஷப் பண்ட் சிறந்த ஆட்டக்காரர் எனக் கூறியுள்ளார்.

சமீபகாலமாக சிறப்பாக விளையாடிவரும் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை ஐபிஎல் போட்டிகளில் தலைமை தாங்கவுள்ளார். இது அவருக்குக் கூடுதல் சுமை தரும் என பலரும் கருத்து கூறிவருகின்றனர். இந்நிலையில் இப்போது ரிஷப் பண்ட் பற்றி முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் பர்த்தீவ் படேல் கருத்து தெரிவித்துள்ளார்.

இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் ‘பலரும் பண்ட்டை தோனியுடன் ஒப்பிடுகின்றனர். அதனால் அவரே கூட தோனி போல விளையாட முயற்சித்திருக்கலாம். ஆனால் அவர் தோனியை விட சிறந்த வீரர். அவருக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைக்கக் கூடியவர். அதனால் டெல்லி அணியை அவரால் சிறப்பாக வழிநடத்த முடியும்’ எனக் கூறியுள்ளார்.