வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 15 செப்டம்பர் 2018 (19:54 IST)

அணியில் இடம்பிடிக்காமல் விடமாட்டேன்; போராடும் யுவராஜ் சிங்

இந்திய அணியின் நட்சத்திர வீரரான யுவரா சிங் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க கடுமையாக போராடி வருகிறார்.

 
இந்திய அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் 2011 உலகக் கோப்பை போட்டிக்கு பின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதன்பின் அவரது அதிரடி ஆட்டம் குறைந்தது. இந்திய அணி உலகக்கோப்பை வெல்ல முக்கிய காரணமாய் திகழ்ந்தார்.
 
இந்திய அணி வென்ற முதல் டி20 உலகக் கோப்பை போட்டியிலும் அசத்தினார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு போராடி மீண்டும் அணிக்கு திரும்பிய யுவராஜ் சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத காரணத்தினால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
 
அதன் பின் தற்போது வரை அணியில் இடம்பிடிக்க போராடி வருகிறார். இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கு கடுமையான வேட்டை நடந்து வருகிறது. யுவராஜ் சிங் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் கண்டிப்பாக 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டியில் இடம்பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.