திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 15 செப்டம்பர் 2018 (16:53 IST)

இது ஒரு சிறந்த வாய்ப்பு: எதற்கு மிஸ்டர் ரோகித்?

14 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் இன்று தொடங்குகிறது. வருகிற 28 ஆம் தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 6 அணிகள் பங்கேற்கின்றன. 
 
ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் தங்களுக்குள் லீக் சுற்றில் தங்களுக்குள் தலா ஒருமுறை மோதிக்கொள்ளும். 
 
இதில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இதிலிருந்து இரு அணிகள் 28 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும். 
 
இது குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் கூறியுள்ளது பின்வருமாறு. முதன்முறையாக ஒரு முழுத்தொடருக்கு கேப்டனாக செல்ல இருக்கிறேன். இது மிகவும் உற்சாகமாக உள்ளது. உலகக் கோப்பைக்கு முன் இந்த தொடர் மிகப்பெரிய வாய்ப்பு. 
 
வீரர்களின் செயல்பாட்டை மதிப்பிடவும், சரியான பேலன்ஸ் அணியை கண்டறியவும் இது ஒரு வாய்ப்பாக அமையும். உலகக் கோப்பைக்கு இன்னும் நாட்கள் உள்ளன. தனிப்பட்ட முறையில் நாங்கள் இந்த தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதுதான் முக்கியமானது என தெரிவித்துள்ளார்.