உலகக்கோப்பை யாருக்கு ? - பீட்டர்சனைக் கலாய்த்த யுவ்ராஜ் !

Last Modified புதன், 3 ஜூலை 2019 (12:57 IST)
உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கும் ரோஹித் ஷர்மாவை யுவ்ராஜ் சிங் பாராட்டியுள்ளார்.

இதுவரை இந்திய அணி சார்பில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவ்ராஜ் சிங் ஆகிய இருவரே உலகக்கோப்பை தொடர்நாயகன் விருதைப் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா சிறப்பாக விளையாடி 4 சதங்கள் உள்பட 500 ரன்களை சேர்த்துள்ளார்.

நேற்று பங்க்ளாதேஷ் அணியுடனான சதத்துக்குப் பிறகு டிவிட்டரில் யுவ்ராஜ் ரோஹித் ஷர்மாவுக்கு ‘உலகக்கோப்பை தொடர்நாயகன் விருதை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள். சிறப்பான ஆட்டம் சாம்பியன்’ எனத் தெரிவித்தார். அந்த டிவிட்டிற்குப் பதிலளித்த இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் ‘இங்கிலாந்து உலகக்கோப்பையை வென்றால் அது நடக்காது’ எனக் கூறினார்.

இதற்குப் பதிலளித்த யுவ்ராஜ் ‘முதலில் அரையிறுதிக்குத் தகுதி பெறுங்கள் அதன் பின் இதைப்பற்றி பேசலாம். மேலும் நான் தொடர்நாயகன் விருதுப் பற்றிதான் பேசினேன். கோப்பையைப் பற்றி அல்ல’ எனக் கருத்து தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :