நேரில் வந்து என் வீட்டை பாருங்கள்: தோனிக்கு மஞ்சள் வீட்டின் உரிமையாளர் கோரிக்கை

yellow house
தோனிக்கு மஞ்சள் வீட்டின் உரிமையாளர் கோரிக்கை
siva| Last Updated: புதன், 28 அக்டோபர் 2020 (16:43 IST)
தமிழகத்தைச் சேர்ந்த தோனி மற்றும் சிஎஸ்கே அணியின் வெறித்தனமான ரசிகர் ஒருவர் தனது வீட்டையே மஞ்சள் நிறமாக மாற்றிய தகவலை இணையதளம் மூலம் அறிந்த தோனி அந்த ரசிகருக்கு நன்றி தெரித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது தனது வீட்டை நேரில் வந்து பார்க்குமாறு தோனிக்கு அந்த வீட்டின் உரிமையாளர் அழைப்பு விடுத்துள்ளார்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி என்ற பகுதியை அடுத்த அரங்கூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன். துபாயில் பணி செய்து கொண்டிருக்கும் இவர் சிஎஸ்கே அணியின் தீவிர ரசிகர் மற்றும் தோனியின் ரசிகர். தோனி விளையாடும் அனைத்து போட்டிகளையும் ஆர்வத்தோடு பார்ப்பது மட்டுமின்றி அவர் மீது தனக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் வகையில் தனது வீட்டிற்கு ஒன்றரை லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்து சிஎஸ்கே அணியின் மஞ்சள் நிறத்தால் பெயிண்ட் அடித்தார். அது மட்டுமன்றி தோனியின் படத்தையும் ஆங்காங்கே வரைந்தார்

இதுகுறித்து தகவலறிந்த ஊடகத்தினர் அந்த வீட்டை புகைப்படம் எடுத்து செய்தியாக வெளியிட்டனர். சமூக வலைதளங்களிலும் இந்த வீடு குறித்த தகவல் தீயாக பரவியது. இந்த வீட்டின் செய்தி மற்றும் புகைப்படங்களை பார்த்த தோனி அந்த ரசிகருக்கு தனது நன்றியை தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தனது கிராமத்திற்கு வந்து தனது வீட்டை தோனி அவர்கள் நேரில் பார்க்க வேண்டும் என கோபிகிருஷ்ணன் அன்பு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். ரசிகரின் வேண்டுகோளை ஏற்று தோனி அந்த வீட்டுக்கு செல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :