வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 29 ஜூன் 2017 (06:15 IST)

ஒரு பந்துகூட வீசப்படாமல் கேன்சல் ஆன மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி

இங்கிலாந்து நாட்டில் தற்போது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருந்த நிலையில் திடீரென மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.



 
 
இந்த நிலையில் இதுவரை நடந்த போட்டிகளின்படி நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் 3 புள்ளிகள் பெற்று முதல் இரண்டு இடங்களில் உள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா தலா  இரண்டு புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. 
 
ரன்ரேடி விகிதத்தின்படி பாகிஸ்தான் அணி கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.