1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 14 செப்டம்பர் 2017 (05:56 IST)

பாகிஸ்தானை தோற்கடித்து த்ரில் வெற்றி பெற்ற உலக லெவன்

உலக லெவன் அணிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் இடையே நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இரண்டாவது டி-20 போட்டியில் உலக லெவன் அணி த்ரில் வெற்றி பெற்று சமன்செய்துள்ளது



 
 
நேற்று நடந்த 2வது டி-20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய உலக லெவன் அணி 19.5 ஓவர்களில் ஒரே ஒரு பந்து மீதமிருக்கையில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 175 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. உலக லெவன் அணியில் அம்லா சிறப்பாக விளையாடி 72 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருப்பினும் 19 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த பெரரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
 
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் இறுதி டி-20 போட்டி லாகூரில் நாளை நடைபெறவுள்ளது.