வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 பிப்ரவரி 2023 (16:11 IST)

உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஓய்வு அறிவிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி

morgan
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்த கேப்டன் இயான் மோர்கன் தனது ஓய்வு அறிவித்துள்ளார். 
 
இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சற்றுமுன் தெரிவித்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறிய போது அனைத்து வகையான போட்டியிலிருந்தும் ஓய்வு பெறுவதாகவும் ரசிகர்களுக்கும் அணியின் நிர்வாகிகளுக்கும் சக வீரர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
16 டெஸ்ட் போட்டிகள், 248 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 115 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள இயான் மோர்கன்ன் 83 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் உள்ளூர் போட்டிகள் மற்றும் லீக் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran