திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 12 பிப்ரவரி 2023 (11:26 IST)

இந்தியா – பாகிஸ்தான் இடையே இன்று மோதல்! – மகளிர் டி20 உலகக்கோப்பை!

India Pakistan
இன்று நடைபெறும் மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ள உள்ளன.

பெண்கள் உலகக்கோப்பை டி20 போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக மோதுகின்றன.

அதில் “ஏ” அணியில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்க தேச அணிகளும், பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, அயர்லாந்து உள்ளிட்ட அணிகளும் இடம்பெற்றுள்ளன.


இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் அணியை தனது முதலாவது போட்டியில் எதிர்கொள்கிறது. இந்திய அணி ஓப்பனிங் வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை. இதனால் அணிக்கு இது பின்னடைவாக அமையலாம் என கருதப்படுகிறது.

இன்று மாலை 6.30 மணியளவில் தொடங்கப்படும் இந்த போட்டிகளில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பது குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Edit by Prasanth.K