1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By

ரொனால்டோ அபார கோல்: முதல் வெற்றியை பெற்றது போர்ச்சுக்கல்

போர்ச்சுக்கல் அணியில் விளையாடி வரும் பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டி ஒன்றில் மூன்று கோல்கள் அடித்து ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டியை டிரா செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் நேற்றைய உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணி, மொராக்கோ அணியுடன் மோதியது. மிகவும் ஆக்ரோஷமாக நடந்த இந்த போட்டியில் ரொனால்டோ தலையால் அடித்து போட்ட அபாரமான கோலால் போர்ச்சுக்கல் அணி 1-0 என்ற கோல்கணக்கில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது
 
இந்த போட்டியில் ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணிக்கு கிடைத்த கார்னர் வாய்ப்பை சரியாக பயன்படுத்திய போர்ச்சுக்கல் வீரர் கார்னரில் இருந்து பந்தை அடிக்காமல், மற்றொரு வீரருக்கு பாஸ் செய்தார். அந்த பந்தை நட்சத்திர வீரர் ரொனால்டோ தலையால் முட்டி அபாரமாக கோல் அடித்து தனது அணியை முன்னணிக்கு கொண்டு வந்தார்.
 
இந்த கோலை சமன்படுத்த மொராக்கோ அணியினர் பெரும் முயற்சி செய்தும் கடைசி வரை முடியவில்லை. இறுதியில் போர்ச்சுக்கல் அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி போர்ச்சுக்கல் அணிக்கு கிடைத்த முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.