வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 16 பிப்ரவரி 2023 (08:11 IST)

உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி..!

pakistan
உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி..!
உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய முதல் போட்டியில் இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இன்னொரு போட்டியில் பாகிஸ்தான் அணி, அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி 20 ஓவர் நிலையில் 165 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்து அயர்லாந்து அணி 166 என்ற இலக்கை நோக்கி விளையாடி நிலையில் 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 70 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த நிலையில் புள்ளி பட்டியலில் இரண்டு புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.
 
Edited by Siva