மகளிர் டி20 சேலஞ்ச் போட்டி: மந்தனா அபார பேட்டிங்
ஆண்கள் ஐபிஎல் போட்டி போன்றே விரைவில் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் டி20 போட்டி ஆரம்பமாகவுள்ளது. அதற்கு அடித்தளமாக முதலில் மூன்று அணிகள் கொண்ட போட்டி மகளிர் சேலஞ்ச் டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. டிரெய்ல்பிளாசர்ஸ் , சூப்பர் நோவாஸ் , வெலாசிட்டி என 3 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் நேற்று டிரெய்ல்பிளாசர்ஸ் அணி, சூப்பர்நோவாஸ் அணியுடன் மோதியது.
முதலில் பேட்டிங் செய்த டிரெய்ல்பிளாசர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் சேர்ந்தது. அந்த அணியின் கேப்டன் மந்தனா 67 பந்துகளில் 90 ரன்கள் அடித்தார். இதில் 10 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணியின் டியோல் 36 ரன்கள் அடித்தார்.
141 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சூப்பர்நோவாஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மந்தனா ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.