1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 29 ஜனவரி 2019 (23:34 IST)

மீண்டும் தொடரை இழந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி முதல் மூன்று போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியது என்பது தெரிந்ததே. இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த போட்டி ஜனவரி 31ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 
இந்த நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 3 ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே இந்திய மகளிர் அணி முதல் ஒருநாள் போட்டியில் வென்றுள்ளது.
 
இந்த நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது.
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து மகளிர் அணி 44.2 ஓவரகளில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 35.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மந்தனா 90 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.