திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 3 நவம்பர் 2017 (20:09 IST)

மகளிர் ஆசிய ஹாக்கிப் போட்டி: இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி

ஜப்பான் நாட்டில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் மகளிர் ஆசிய ஹாக்கிப் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் இன்று அரையிறுதியில் ஜப்பான் அணியுடன் மோதியது



 


ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் போட்டதால் இரண்டாம் பாதியில் இரு அணி வீராங்கனைகளும் தங்கள் முழு திறமையை வெளிப்படுத்தினர். இரண்டாம் பாதியில் இந்திய அணி வீராங்கனைகளின் சமயோசித ஆட்டத்தினால் இந்திய அணி ஜப்பான் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில் வரும் 5ஆம் தேதி இந்திய அணி, சீனாவுடன் இறுதி போட்டியில் மோதவுள்ளது. இந்த போட்டியிலும் சீனாவை இந்திய அணி வீராங்கனைகள் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.